Ad Code

Responsive Advertisement

ஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன்.! உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ

 


தனது ஆங்கிலப் புலமையால் வெளிநாட்டவர்களையே ஏழை சிறுவன் ஒருவன் வாயடைக்க வைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.

ஆங்கிலம் என்பது அறிவு அல்ல வெறும் மொழி என்பதை புரிந்து கொள்ள இன்று எவரும் தயாராக இல்லை. இதனால் பெற்றோரும் பிள்ளைகளை லட்சம் லட்சமாக செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். என்றாலும் போதிய புலமை அங்கேயும் கிடைத்து விடுவதில்லை.

என்னதான் காசு செலவழித்தாலும் அனுபவமே சிறந்த ஆசான் என்பது இன்றைய கால மக்களுக்கு புரிய மறுக்கிறது. அப்பேற்பட்டவர்களை தனது ஒரே காணொளியில் வாயடைக்க வைத்து விட்டான் ஏழை சிறுவன் ஒருவன்.

இந்தியாவை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டவர்களுக்கு, வழிகாட்டியாக பணிபுரியும் அச்சிறுவன் பள்ளியின் பக்கம் தலைவைத்து கூட படுத்திராதவன். தனது வயிற்று பிழைப்புக்காக சிறுவயது முதல், இந்த பணியை செய்து வரும் அவன், ஆங்கிலத்தில் புலமையாக இந்திய கட்டட கலையின் சிறப்பம்சத்தை வெளிநாட்டவர்களுக்கு அவர்களை போலவே பேசி விளக்கி புரிய வைக்கிறான்.

இதனை வெளிநாட்டவர் ஒருவர் படம் பிடித்து பதிவிட, அச்சிறுவன் தற்பொழுது இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றான். 



Post a comment

0 Comments