இந்திய அளவில் கராத்தே போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை பிழைப்புக்கு வழி இல்லாமல் சுண்டக்கஞ்சி காய்ச்சி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
பெரும்பாலான துறைகளை போலவே ஏழை எளிய மக்கள் விளையாட்டு துறையில் சாதிப்பது என்பதும், இன்று வரை எட்டா கனியாகவே இருந்து வருகிறது. அப்படியே சாதித்தாலும் அதற்கான போதிய அங்கீகாரம் கிடைக்காமல், கிடைத்த கூலி வேலைகளை செய்து வரும் அவலம் இந்தியாவில் பலமுறை நிகழ்ந்தேறி இருக்கிறது.
அப்படி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிம்லா முண்டா என்கிற இளம் வீராங்கனையும் ஏழ்மையில் இருந்து விடுபட முடியாமல் போராடி வருகிறார். இவர் 34வது தேசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி வென்றதுடன், பல தேசிய அளவிலான போட்டிகளில் பல தங்க பதங்கங்களை குவித்த பெருமைக்குரியவர்.
ஆனாலும் போதிய வழிகாட்டல் மற்றும் தேசிய வீராங்கனைக்கானஅரசின் உதவிகள் கிடைக்காமல் போராடி வெறுத்து போன இவர், தன் பகுதியில் சுண்டக்கஞ்சி விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்த தகவல் செய்தியாளர் ஒருவர் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியாக,
பல இணைய வாசிகள் அவருக்கு உதவ முன்வந்து இருக்கின்றனர், மேலும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்கள் கவனத்திற்கும் இந்த வீராங்கனை குறித்த தகவல் கொண்டு செல்லப்பட, பிம்லா முண்டா அவர்களுக்கு நிதி உதவி செய்யக்கோரி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
झारखंड में खिलाडियों की दुर्दशा का अंदाजा इसी बात से लगाया जा सकता है कि खिलाड़ी हड़िया बेचने को मजबूर हैं। 34वें नेशनल गेम में कराटे में झारखंड के लिये सिल्वर मेडल और
— Sohan singh (@sohansingh05) October 18, 2020
नेशनल कराटे चैंपियनशिप में गोल्ड, सिल्वर और रजत पदक जीत चुकी विमला मुंडा हड़िया बेचने को मजबूर हैं।#Ranchi pic.twitter.com/ZsrUOdd6fn
0 Comments