Ad Code

Responsive Advertisement

வம்பையும் இழுத்துட்டு காலையும் வாரி விட்டுட்டாரே..! விஜயால் புலம்பும் தயாரிப்பு நிறுவனம்


விஜய் படங்கள் என்றாலே பிரச்சனை தான். அவர் இடம்பெற்று இருக்கும் முதற்பார்வை போஸ்ட்டர், டைட்டில், டீசர், ட்ரைலர் என அனைத்தும் புது புது பிரச்சனைகளை கிளப்பி விடும். அதிலும் அரசியல் ரீதியாக வேறு அவர் பேசி விடும் வார்த்தைகளால் படத்தின் முதலுக்கே மோசம் வந்துவிடும்.

இப்படி இவரது முந்தைய படங்கள் பிரச்சனையை சந்தித்து மீண்டு வந்திருந்தாலும், விஜயை வைத்து படம் எடுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குவதில்லை. அப்படி விஜயின் பிகில் திரைப்படத்தை தயாரித்த கல்பாத்தி நிறுவனம் தற்பொழுது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் வரும் இடையூறுகளை கண்டு கதிகலங்கி போய் நிற்கிறது.

குறிப்பிட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஆளும் கட்சியை விமர்சிக்கும் விதத்தில், 'அவரவரை அந்தந்த இடத்தில் தகுதிக்கேற்ப வைக்க வேண்டும்' என விஜய் பேசி இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனை அடுத்து பிகில் திரைப்படத்திற்கு பல இடையூறுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை முறியடித்து நாளை ரிலீஸ் ஆகவும் உள்ளது. எனினும் படத்திற்கு படத்திற்கு வசூலை அள்ளிக்கொடுக்கும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அரசு கொடுத்த நெருக்கடியின் பெயரில் அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக 35 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் எனும் நிலையில், விநியோகஸ்தர்களும், தாங்கள் வழங்கிய தொகையில் பாதியை திருப்பி கேட்க, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு அரசிடம் முறையிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

என்றாலும், அரசியல் தரப்பிலோ, 'விஜயை வந்து பேச சொல்லுங்கள்' என கிடுக்குபிடி போட, தயாரிப்பு நிறுவனம் விஜயை தொடர்பு கொள்ள, அவரோ  'தன்னால் பேச முடியாது' என கடைசி நேரத்தில் காலை வாரி இருக்கிறார். இதனால் செய்வதறியாது தயாரிப்பு நிறுவனம் கதிகலங்கி நிற்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.