Ad Code

Responsive Advertisement

குட்டி கதையில் எங்களை இழிவு படுத்திட்டார்...! 'விஜய்'க்கு பூக்கடை காரர்கள் கண்டணம்


நடிகர் விஜயின் பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும், அதே சமயம் பல சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த விழாவில் ஆளும் கட்சியை கிண்டல் செய்வது போன்ற நடிகர் விஜயின் பேச்சுக்கு, அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து, 'கரி வெட்டும் கட்டையில் காலை வைத்து தங்களை இழிவு படுத்தி விட்டதாக கூறி பிகில் திரைப்பட போஸ்டர்களை கிழித்து கறிக்கடை வியாபாரிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில் தற்பொழுது, திருச்சி ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த பூக்கடை வியாபாரிகள் சிலரும், விஜயின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது பிகில் இசைவெளியீட்டு விழாவின் போது, 'பூக்கடை காரனை பட்டாசு கடையில் அமர வைத்ததால், பட்டாசுக்கு தண்ணீர் தெளித்து வியாபாரம் வீணாகி போனதாக' பலரால் பேசப்படும் குட்டி கதை ஒன்றை கூறி இருந்தார்.

அதாவது 'யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அவரை அந்த இடத்தில்  வைக்க வேண்டும்' என்கிற நீதியை விளக்கும் இந்த கதையின் மூலம், பூக்கடை காரர்களை விஜய் இழிவு படுத்திவிட்டதாக கூறி, 'விஜயின் பேச்சை திரும்ப பெற வேண்டும்' என்கிற கோரிக்கையில் பூக்கடை காரர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.