ஏன், தான் ஒரு மக்கள் கொண்டாடும் நாயகனான பிறகும், கார்த்திக் சுப்பாராஜ் காக, ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார். 'பீட்சா' எனும் தனது வாழ்வை மாற்றிய திரைப்படத்தை கார்த்திக் சுப்பாராஜ் கொடுத்ததற்கான நன்றிக்கடனாக விஜய் சேதுபதி இக்காரியத்தை செய்தார்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி விஜயின் 64வது படத்திலும் அவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதன் பின்னணி என்ன என்று விசாரிக்கையில், வில்லன் வேடம் என்றதும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் மறுக்கவே செய்து இருக்கிறார். என்றாலும் விடாது துரத்திய படக்குழுவை துரத்தி அடிக்க, தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கி அவர் கேட்டதாக தெரிகிறது.
மாறாக அப்படக்குழு அதற்கும் ஒப்புக்கொள்ள, வந்த ஆபரை விட மனமில்லாமல் மறுபடியும் வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார்.
Social Plugin