Ad Code

Responsive Advertisement

வாங்குறது கருப்பு பணம் இதுல கருத்து வேற..! விஜயை வெளுத்து வாங்கிய இயக்குனர்


நடிகர் விஜய் பிகில் திரைப்பட இசைவெளியீட்டுவிழாவில் பேசிய விஷயங்கள் தற்பொழுது அவருக்கெதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. முன்னதாக ஆளும்கட்சி பிகில் திரைப்படம் வெளியேறாமல் தடுக்க பல இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில்,

இப்பொழுது பிரபல இயக்குனர் ஒருவரும் விஜயை படுபயங்கரமாக விமர்சித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார். உயிர், மிருகம், கங்காரு, சிந்து சமவெளி என சர்ச்சையான படங்களை இயக்கியவர் சாமி.


'இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் என பேசும் விஜய், அதே ரசிகர்களுக்கு கை கொடுத்து விட்டு, டெட்டால் போட்டு கை கழுவுவதை நான் பார்த்திருக்கிறேன்.

அவர் கூறும் ரசிக பாசம் எல்லாம் வெறும் நடிப்புதான். பலரை விமர்சித்து பேசும் விஜய், 50 கோடி சம்பளம் வாங்குகிறார். அதுவும் கருப்பு பணமாக. நீங்கள் நடிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள். பிறரை குறை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை' என பேசி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.