வெள்ளித்திரையில் முடிசூடா மன்னர்களாக இருந்தாலும் சின்னத்திரை என்று வந்துவிட்டால் டிவி சீரியல்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என்ற நிலையே இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையை மாற்றி சின்னத்திரையிலும் நான் தான் கிங்கு என முதன் முதலில் நிரூபித்து காட்டியவர் தளபதி விஜய். இதற்கு குடும்ப மற்றும் குழந்தைகள் ரசிக பட்டாளம் அவர் பின் இருந்தது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இப்புள்ளிவிவரத்தை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டது தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாசத்தால் கட்டி போட்டது இத்திரைப்படம்.
விளைவு, சின்னத்திரையிலும் TRP மன்னனாக இருந்த விஜயின் சாதனைகளை இத்திரைப்படம் அசால்டாக முறியடித்தது. சின்னத்திரை வரலாற்றிலேயே இதுவரை ஒளிபரப்பான திரைப்படங்களில், சுமார் 1,81,49,000 பார்வையாளர்களை பெற்று விஸ்வாசம் திரைப்படம் முன்னிலை வகிக்கிறது.
இந்த சாதனையை சமீபத்தில் ஒளிபரப்பான சர்கார் இசைவெளியீட்டு விழா முறியடிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் 95,00,000 பார்வையாளர்களை மட்டுமே பெற்று ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
#BigilAudioLaunchOnSunTV— Actor Vijay Trends🇱🇰🆔 (@AVT_ActorVijay) October 3, 2019
Impression - 9594000
TVR - 12.31
Chichester Ever TVR for a Evenet in past 2 years 🔥 #TRPKingThalapathyVIJAY 😎@actorvijay @Atlee_dir @archanakalpathi @SunTV pic.twitter.com/izx3HNTvMp
இதனால் சின்னத்திரை TRP மன்னன் என்கிற பட்டத்தை நடிகர் அஜித்தே தொடர்ந்து தக்கவைத்து இருக்கிறார்.
Social Plugin