நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்காக தனது பல கட்டுப்பாடுகளை தளர்த்தி பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.
பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், தனது நெருங்கிய உறவினரான பிரிட்டோ அவர்களது தயாரிப்பில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது நடிகர் விஜயின் தயாரிப்பு என்ற பேச்சும் ஒரு புறம் அடிபடுகிறது.
இப்படி ஒரு சூழ்நிலையில் விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் விவகாரமாக போய் முடிகிறது. அதாவது முன்னதாக கதை படி வெளிநாட்டில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட இருந்த நிலையில், நடிகர் விஜய் தொழிலாளர்கள் நலன் கருதி 'தமிழகத்திலேயே எடுக்கலாம்' என கூறியதாக ஒரு தகவல் வெளியானது.
என்றாலும் படத்தின் செலவை குறைக்கவே விஜய் அவ்வாறு கூறியதாக, திரையுலகினர் விமர்சனம் செய்ய துவங்கினர். இதனை அடுத்து, வழக்கமாக '6 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடக்க கூடாது. சனி, ஞாயிறுகளில் படப்பிடிப்பு இருக்க கூடாது' என கட்டுப்பாடுகள் விதிக்கும் விஜய்,
இந்த படத்திற்காக, '6 மணிக்கு மேலேயும் நடித்து கொடுக்கிறேன். மாதம் 5 நாள் விடுமுறை மட்டும் போதும்' என அந்த கட்டுப்பாடுகளை தகர்த்திருப்பதும், சொந்த படம் என்பதால் விஜய் இப்படி தாராளம் காட்டுவதாக விமர்சனங்கள் எழ காரணமாக அமைந்திருக்கிறது.
Social Plugin