Ad Code

Responsive Advertisement

அதிகம் சீனி உபயோகிப்பவரா நீங்கள்..? இந்த நோய் கண்டிப்பா வரும்... எச்சரிக்கும் மருத்துவர்கள்


இனிப்புக்காக சேர்க்கப்படும் வெள்ளை சீனியினால் ஏற்படும் தீமைகள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுதான் வருகிறது. என்றாலும் மலிவு விலை கருதி அதனையே மக்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து வெள்ளை சீனியை உபயோகிப்பதால் ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது மருத்துவ வட்டாரங்கள். இதற்கு சீனி பொலிவுடன் தோன்றவும், கருத்து போகாமல் இருக்கவும் சேர்க்கப்படும் சல்பர் டை ஆக்ஸைடு எனும் வேதி பொருள் காரணமாகவும் கூறப்படுகிறது.

என்னதான் குறிப்பிட்ட செயல்முறைக்கு பின் சல்பர் டை ஆக்ஸைடு நீக்கப்பட்டு விடுவதாக கூறப்பட்டாலும், எஞ்சி இருக்கும் சிறிதளவு சல்பர் வெள்ளை சீனியை உபயோகிப்பவர்களுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதனை தவிர்க்க பனை வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை உணவில் சேர்த்தால் ஆஸ்துமா ஆபத்திலிருந்து தப்பிப்பதோடு, உடலுக்கும் நன்மை பயக்கும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல்.