Ad Code

Responsive Advertisement

மீண்டும் வீசப்போகும் வைகைப்புயல்...! எதிர்த்தவர்களே இப்போ வீட்டு வாசலில்...! கெத்து காட்டும் வடிவேலு...!


நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் நடிக்க மறுத்ததால் எழுந்த பிரச்சனைகள், அவரை நடிக்க முடியாத அளவிற்கு திரைத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்கும் படி செய்தது.

என்றாலும் தளராத வடிவேலு, மீண்டும் கெத்தாக திரும்ப வருவேன் என அவரது ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் அவர் கூறிய படியே மீண்டும் திரைத்துறையில் மாபெரும் திரைப்படத்துடன் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

இந்தியன்-2 திரைப்படத்திற்கு பின் நடிகர் கமல் ஹாசன், இயக்கி நடிக்க இருக்கும் திரைப்படம் 'தலைவன் இருக்கின்றான்'. 1992ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'தேவர் மகன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் உருவாக இருக்கிறது. 

இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் திரைப்பட கதைக்கு, தேவர் மகனில் தோன்றிய வடிவேலுவின் கதாபாத்திரமும் அவசியம் என்பதால் தயாரிப்பு நிறுவனத்திடம் வடிவேலு கண்டிப்பாக நடிக்க வேண்டுமென கிடுக்கிப்பிடி போட்டு இருக்கிறார்.

இதன் காரணமாக, தயாரிப்பு நிறுவனமான லைகா வடிவேலுவை தொடர்பு கொண்டு, நடிக்க அழைத்துடன், 24ம் புலிகேசி திரைப்பட பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என சமரசமும் பேசி இருப்பதாக தெரியவந்துள்ளது.