Ad Code

Responsive Advertisement

புகைபிடித்துவிட்டு இதை செய்கிறீர்களா..? மரணம் நிச்சயம்...! எச்சரிக்கும் மருத்துவர்கள்


புகை பிடிக்கும் பழக்கமே உயிரைக்கொல்லும் என்பது உலகறிந்த ஒன்றாக இருந்தாலும், அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது.

இப்படியொரு புற்றுநோய், நுரையீரல் கோளாறுகளை உண்டாக்கும் இந்த உயிர் கொல்லி பழக்கத்துடன், இதனையும் சேர்த்து செய்தால் உயிரிழக்கும் அபாயம் 5 மடங்கு அதிகரிக்கும் என்கிற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

நம்மூரில் புகைபிடிக்கும் நபர்கள் பலர், உடன் தேநீர் அருந்தும் பழக்கத்தையும் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு செய்வதனால், எசாகேஜியல் என்கிற புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.


தொண்டை குழி, உணவுக்குழல் ஆகியவற்றை தாக்கும் இந்த புற்றுநோய்  ஆரம்பகட்டத்தில் கண்டறிப்பட்டு சிகிச்சை பெறாமல் விடப்பட்டால், உயிரிழப்பு உறுதி என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று.