Ad Code

Responsive Advertisement

தளபதி-64: அடித்து கொள்ளும் டிவி சேனல்கள்..! துவங்கிய சில தினங்களில் இத்தனை கோடி லாபமா..?


விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கி இருந்தது. இதனை அடுத்து படப்பிடிப்புகள் ஓரிரு நாட்கள் நடைபெற்று இருக்கும் நிலையில், அதன் சேட்டிலைட் உரிமத்தை பெற பல டிவி சேனல்கள் போட்டா போட்டி இட்டன.

நடிகர் விஜயின் படங்கள் ஒளிபரப்பாகும் சமயங்களில் சேனல்களின் டிஆர்பி யும் எகிறுவிடும்.இதற்கு அவரது படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் டிவி சேனல்களுக்கு இடையே, விஜயின் 64வது திரைப்படத்தை வாங்கிவிட கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் அதிகபட்சமாக '35 கோடி' ரூபாய் விலை பேசிய நிலையில், சன் டிவி நிறுவனம்  இத்திரைப்படத்தின் சேட்டிலைட்உரிமத்தை பெற்று இருப்பதாக ஒரு தகவல் தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.