Ad Code

Responsive Advertisement

தமிழனென்று சொல்லடா தள்ளாடி நில்லாடா...! குடிமகன்களை கிண்டல் செய்த கஸ்தூரி


தீபாவளி திருநாளை ஒட்டி மதுவிற்பனை கோடிகளை கொட்டி கொடுத்திருந்த நிலையில், அதற்கு மாபெரும் உறுதுணையாக இருந்த குடிமகன்களை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான பதிவுகள் மூலம் பரபரப்பை கிளப்பி வருபவர் நடிகை கஸ்தூரி. இந்நிலையில் வழக்கம் போல இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு நடத்தும் மதுபான கடைகளில், சுமார் 450 கோடி ரூபாய்க்கு வியாபாரம் அமோகமாக நடந்து வரலாற்று சாதனையை படைத்து இருந்தது.

இந்நிலையில் இதனை கேலி செய்து நடிகை கஸ்தூரி, 'மது விற்பனையில் தமிழக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழனென்று சொல்லாடா தள்ளாடி நில்லடா' என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Post a Comment

0 Comments