ரயில், பேருந்துகள் என சென்னை பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சிலர் செய்யும் அட்டகாசங்கள் பார்க்கும் நம்மை நடுங்க வைத்து விடும். அந்த அளவுக்கு உயிரை பணயம் வைத்து படிக்கட்டுகளில் தொங்கி அவர்கள் செய்யும் சாகசங்கள் கொடூரமானவை.
கல்லூரி மாணவர்கள் தான் ரூட்டு தலை முறையில், சக பயணிகளுக்கு இப்படி அராஜகம் செய்கிறார்கள் என்றால் அவர்களை மிஞ்சும் படி, பள்ளி மாணவர்கள் சிலர் செய்யும் விபரீத சாகசங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வலம்வருகிறது.
குறிப்பிட்ட வீடியோவில் கரணம் தப்பினால் மரணம் எனும் நிலையிலும், ஓடும் பேருந்தின் சக்கரத்தின் அருகே தலைகீழாக தொங்கியபடி பள்ளிமாணவர்கள் சிலர் பயணம் செய்ய, காண்போரை கதிகலங்க வைக்கிறது அந்த வீடியோ.
Social Plugin