வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஈட்டி, மருது, காக்கிசட்டை என தான் நடித்த படங்களில் துளி கவர்ச்சியும் இன்றி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
இடை கூட தெரியக்கூடாது என கண்டிஷன் போட்டு நடித்து வந்த இவர், திடீரென மாடர்ன் உடைகளில் தோன்றி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
முன்னணி நடிகையாக முடியவில்லை என்றாலும் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீ திவ்யா. அந்த வாய்ப்பும் கடந்த இரண்டு வருடங்கள் கிடைக்காமல் இருந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு 'மழை பிடிக்காத மனிதன்' என பெயரிடப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்திற்கு பின் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே வழக்கத்தை மீறி தற்பொழுது ஸ்ரீ திவ்யா கவர்ச்சி காட்ட துவங்கி இருப்பதாக கிசு கிசுக்கிறது திரையுலகம்.
Social Plugin