Ad Code

Responsive Advertisement

தம்மு,சரக்கு..! சீரழியும் பள்ளி மாணவிகள்... பெற்றோர்களே உஷார்


ஆண்கள் மட்டுமே மது அருந்திய, புகைபிடித்த காலம் போய் இன்று பெண்கள் ஆண்களுக்கு இணையாக போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலும் மேல்தட்டு மக்களிடம் மட்டும் சகஜமாக இருந்து வந்த இந்த பழக்கங்கள், ஏழை எளிய மக்களிடம் தொற்றிக்கொள்ளும் அபாயமும் தற்பொழுது அதிகரித்துள்ளது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் உலவும் சிறு சிறு வாண்டுகள் முதல், பள்ளியில் பயிலும் இளம்வயது பெண்கள் வரை மது அருந்தும் காணொளிகளை ஆதாரமாக கூறலாம்.

பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது.

இப்படி சில தினங்களுக்கு முன்பு, சேலம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர், வகுப்பறையில் நடத்திய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மது பாட்டில்களுடன் போட்டோ எடுத்து ஆசிரியர்களிடம் சிக்கினர்.

இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு, ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பினர். இதனால் மனமுடைந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், 'வெளியே சொன்னால் அவமானம் ' என கருதி, போலீசார், உறவினர்கள் என எவருக்கும் தெரிவிக்காமல் இறுதி சடங்கை நிகழ்த்தி உடலை தகனம் செய்ததாக தெரிகிறது.

என்றாலும் மாணவியின் இறப்பு குறித்த செய்தி பரவ, தகவலறிந்த போலீசார் 'மாணவி கொலை செய்யப்பட்டாரா?' என்கிற கோணத்தில் பெற்றோரை  விசாரித்து வருகின்றனர்.