Ad Code

Responsive Advertisement

அழகே பொறாமை படும் பேரழகு...! புதிய தோற்றத்தில் பட்டையை கிளப்பும் அண்ணாச்சி


சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள் அவர்களின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

தனது கடை விளம்பரங்களில் பெரிய பெரிய நடிகர்களை நடிக்க வைப்பதற்கு மாறாக தானே நடித்து, கேலி, கிண்டல்களை சந்தித்தாலும் அதே சமயம் பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை பெற்று இருப்பவர் சரவணன் அருள்.

இவர் இயக்குனர்கள் ஜே.டி, ஜெரி இயக்கத்தில் திரைப்படம் ஒன்றில் நாயகனாகவும் இருக்கிறார். விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்க இருக்கும் நிலையில், அவரது புதிய தோற்றமும் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.


பெரும்பாலும் மீசை இன்றியே காட்சி அளித்த சரவணன் அருள், தனது கடையின் புதிய விளம்பரத்தில் மீசையுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். குறிப்பிட்ட தோற்றத்திலேயே அவர் திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ள நிலையில், அத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறதுவங்கியுள்ளது.