கடந்த 2014ம் ஆண்டு வெளியான வல்லவனவுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தன்னை ஒரு நாயகனாக அறிமுகப்படுத்திக்கொண்ட சந்தானம், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் உருவான அக்யூஸ்ட் நம்பர் 1, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் வெளியாக காத்திருக்கும் நிலையில் தனது புதிய கண்டிசன்களால் கதை சொல்ல வரும் இயக்குனர்களை அலற விடுகிறாராம்.
அதாவது இதுவரை காமெடி கலந்த கதைகளில் நடித்து வந்த இவர், 'இனிமேல் என் படத்துக்கு காமெடி கதாபாத்திரத்திற்கு தனியாக காமெடியன்கள் வேண்டும், என் கதாபாத்திரம் சீரியஸான ஆக்சன் கலந்த ஒன்றாக இருக்க வேண்டும்' என கண்டிஷன்கள் விதித்து இயக்குனர்களை கதிகலங்க வைக்கிறாராம்.
ஏற்கனவே 'தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம், திரும்பி காமெடியனாக வாங்க' என ரசிகர்களும் திரையுலகினரும் சந்தானத்துக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், மொத்தமாக தன்னை ஆக்சன் ஹீரோவாக்கி கொள்ள நினைக்கும் சந்தானத்தின் முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Social Plugin