Ad Code

Responsive Advertisement

பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடுவேன்...! ஜிம் பாடி வேற...! காமுகனின் அதிர்ச்சி வாக்குமூலம்


5க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த சேலத்தை சேர்ந்த வாலிபர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே திக்குமுக்காட செய்து இருக்கிறது.

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை  சேர்ந்தவர் பட்டதாரி இளைஞரான சபரி அபிஷேக். இவர் தன்னை பின்தொடர்ந்து தொல்லை தருவதாக, இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தெரிவிக்க, அவரை பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர் பெற்றோர்.

இதனை அறியாத சபரி வழக்கம் போல அந்த பெண்ணை தொல்லை செய்ய, கையும் களவுமாக பிடித்த பெற்றோர் அவருக்கு தர்ம அடி கொடுத்திருக்கின்றனர். 

அப்பொழுது அங்கு வந்த போலீசார், பெண்ணின் பெற்றோரிடம் இருந்து வாலிபரை மீட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் எவரும் எதிர்பார்த்திராத வகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சபரி அபிஷேக் இப்படி பெண்ணிடம் எல்லை மீறுவது முதல் முறையல்ல, ஏற்கனவே பலரை பின்தொடர்ந்து மயக்கி, ஆபாச வீடியோக்கள் எடுத்து விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து பேசிய குற்றவாளி சபரி அபிஷேக், நான் ஜிம் சென்று உடலை கட்டுமஸ்தாக வைத்து இருப்பேன். இதனால் எனது முதற்பார்வையிலேயே பெண்கள் மடங்கி விடுவார்கள்.

அப்படி என்னிடம் நெருங்கி பேசுபவர்களிடம் ஆபாச புகைப்படங்கள் அனுப்பச்சொல்லி, அதை வைத்தே மிரட்டி கற்பழிப்பேன்' என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

இவ்வாறு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட பெண்களைஅவர் கற்பழித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பொக்சே சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு சபரி சிறையில் அடைக்கப்பட்டார்.