Ad Code

Responsive Advertisement

அந்த காமெடி நடிகரா வேண்டவே வேண்டாம்..! சூப்பர் ஸ்டார் எடுத்த அதிரடி முடிவு


தனது படங்களில் நகைச்சுவையும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர் நடிகர் ரஜினிகாந்த். இதன் காரணமாக தனது படங்களில் காமெடியனக்காக யார் நடிக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வாராம்.

இந்நிலையில் தர்பார் திரைப்படத்தை அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்திற்கான காமெடி நடிகரையும் அவரே தேர்வு செய்து இருக்கிறார்.

இன்றைய தேதிக்கு தமிழ் திரையுலகில் முன்னிலையில் இருக்கும் காமெடி நடிகர் என்றால் அது யோகிபாபு தான். இவரையே தர்பார் திரைப்படத்திலும் ரஜினி தேர்வு செய்து இருந்தார்.

ஆனால் சமீப காலமாக அவர் படு பிசியாக இருக்கும் காரணத்தினால், விஜயின் பிகில் போன்ற திரைப்படங்களில் அவருக்கு பதிலாக பல காட்சிகள் டூப் வைத்தே படமாக்கப்பட்டு இருக்கிறது. இதனை கேள்வி பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிவாவின் படத்திலும் இந்த பிரச்சனை வந்து விட கூடாதென கருதி யோகிபாபு பரிந்துரைக்கப்பட்டும் நடிகர் சூரியை தேர்வு செய்து இருக்கிறாராம்.

இந்த கருத்து ஒருபுறம் இருந்தாலும், யோகிபாபு நடித்த தர்மபிரபு, கோமாளி போன்ற படங்களில் தன்னை கிண்டல் செய்து இடம்பெற்றிருந்த வசனங்களும், ரஜினியின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கிசு கிசுக்கப்படுகிறது.