Ad Code

Responsive Advertisement

முன்னாள் காதலியை கண்ணீருடன் தேடிய ரஜினி..! நன்றி கூட கூற முடியாமல் வருத்தம்


தமிழ் திரையுலகில் இவர் தான் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் மெச்சும் இடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்படியொரு நிலையை எட்டுவதற்கு காரணமாக அமைந்த தன் முன்னாள் காதலிக்கு நன்றி கூட தெரிவிக்க முடியாமல் அவர் வருந்தியது குறித்த தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.

சினிமாவில் ஜொலிப்பதற்கு முன், கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் தனது வழித்தட பேருந்தில் பயணித்த, மருத்துவ கல்லூரி பெண் ஒருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு, அதுவே காதலாகவும் மலர்ந்து இருக்கிறது.

நடத்துனர் பணியில் இருந்தவாறே, நாடகங்களிலும் நடித்து வந்த ரஜினி, தான் நடித்த நாடகத்திற்கு காதலியை அழைத்து சென்று தனது நடிப்பு திறமையை காட்டி இருக்கிறார்.

இதனை கண்டு வியந்த அந்த பெண், தென்னிந்திய சினிமாவின்     தலைநகராக விளங்கிய சென்னை சென்று வாய்ப்பு தேட அறிவுறுத்தியதுடன், பண கஷ்டத்தில் இருந்த அவருக்கு 500 ரூபாய் அளித்தும் உதவி இருந்தார்.

அவர் அளித்த ஊக்கத்திலேயே ரஜினி, வாய்ப்பையும் தேடி சினிமாவில் வெற்றி கண்டார். அதன் பின்னர் தனது வெற்றிக்கு அடித்தளம் இட்ட அந்த பெண்ணை சந்திக்க முயன்றும் முடியவில்லை. அவர் தங்கி இருந்த வீடும் காலி செய்யப்பட்டு இருந்ததால், 'இன்று வரை அவருக்கு நன்றி கூறும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை' என பாட்சா படப்பிடிப்பின் போது ரஜினி கண்ணீர்மல்க புலம்பியதாக, நடிகர் தேவன் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார்.



  

Post a comment

0 Comments