Ad Code

Responsive Advertisement

மருத்துவமனையில் அன்பு காதலன்...! மாபெரும் சோகத்தில் லேடி சூப்பர் ஸ்டார்


இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் ஊர் அறிந்த விவகாரம். விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் நயன்தாராவை நிலை குலைய செய்திருக்கிறது காதலனின் உடல் நலக்குறைவு. தமிழக மக்கள் அனைவரையும் ஆட்டி படைக்கும் டெங்கு காய்ச்சல் விக்னேஷ் சிவனையும் விட்டு வைக்கவில்லை.

இதனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து வர உடனிருந்து, அவரை நயன்தாராவே கவனித்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக படப்பிடிப்புகளிலும் கவலையோடு இருந்த நிலையில்,

'லேடி சூப்பர் ஸ்டாரை இதுவரை இப்படி பார்த்ததே இல்லை' என வருத்தம் தெரிவித்து வருகின்றனர் திரையுலகினர்.