தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருக பெருமானை பற்றி பாடும் சீன பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் பேசும் ஆர்வம் தமிழர்களிடையே குறைந்து வந்தாலும், உலகின் மூத்த மொழியாக அதன் பெருமையை அறிந்த வெளிநாட்டினர் பலரும் தமிழ் மொழியை கற்று பேச அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழர்களிடையே கிடைக்கும் ஆதரவும், அவர்களை மேலும் ஊக்குவிக்க, தமிழ் கற்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இப்படி இருக்க பிரபல தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், சீன பெண் ஒருவர், 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' எனும் முருகப்பெருமானின் புகழ் கூறும் பாடலை பாடி இருக்கிறார்.
ஏதோ மனப்பாடம் செய்தோம் பாடினோம் என்று இல்லாமல், உணர்ச்சி பொங்க முருகப்பெருமானை புகழ்ந்து அவர் பாடிய இந்த பாடலுக்கு, தமிழர்கள் மட்டுமல்லாது பலரும் தங்களது வரவேற்பினை அளித்து வருகின்றனர்.
0 Comments