இந்திய பிரதமர் மோடி எந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் போற்றப்படுகிறாரோ, அதே அளவுக்கு கிண்டல்களுக்கும் ஆளாகிறார். என்றாலும் தனது கொள்கைகளில் விடாப்பிடியாக இருந்து வரும் அவரை, அழகி போட்டியில் பெண் ஒருவர் கிண்டல் செய்த காணொளி இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.
நாகாலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற மிஸ் கோஹிமா அழகி போட்டியில், கலந்து கொண்ட சச்சு என்ற பெண்தான் இப்படியொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். குறிப்பிட்ட போட்டியின் இறுதி சுற்றின் போது, அவரிடம், 'இந்திய பிரதமரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தால் என்ன கூறுவீர்கள்?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எவரும் எதிர்பார்த்திராத படி, 'மாடுகளை விட்டுவிட்டு பெண்கள் நலனில் அக்கறை காட்டுமாறு கூறுவேன்' என பதிலளித்தார். இதனை கேட்டு அரங்கமே அதிர, அந்த போட்டியில் இரண்டாவது பரிசையும் தட்டி சென்றார்.
இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அழகும் தைரியமும் நிறைந்த பெண் என சச்சுவை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் மறுபுறம் பிரதமரை கலாய்த்ததுக்காக கண்டனங்களும் எழுந்துள்ளது.
During Miss Kohima 2019 beauty pageant, a contestant was asked the question:— Riaz Ahmed (@karmariaz) October 14, 2019
"if Prime Minister of our country Modi ji invites you to chat with him, what would you say?"
She replied: If I were invited by the PM of India, I would tell him to focus more on women instead of cows. pic.twitter.com/Q4HDgjlYWt
Social Plugin