மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித் எனும் சிறுவன் பற்றிய செய்திகள் தான் தற்பொழுது தமிழகமெங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. தீபாவளி கொண்டாட வேண்டிய சமயத்தில் மக்கள் பலரும், சிறுவனுக்காக பிரார்த்தனை செய்தவராறு இருக்கின்றனர்.
இந்நிலையில் 20 அடி ஆழத்தில் சிறுவன் இருந்த போதே மீட்க தவறி, தற்பொழுது 100 அடி ஆழத்துக்கு சென்று விட்டதால், மீட்பில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து பலரும் அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில், பிரபல நடிகை மீரா மிதுனும் ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்றால், அண்டை மாநிலங்களில் இருந்தாவது வாங்கி வந்திருக்க வேண்டும்.
இதுவே முதலமைச்சர் எடப்பாடி போன்ற பெரிய அரசியல்வாதிகள் வீட்டு குழந்தைகள் விழுந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்' என பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
But i am still concerned about the Chief minister @CMPalanisamy attitude on the same and am sure if it was his family , he would have got the best equipment at the earliest ! @PTTVOnlineNews @cineulagam pic.twitter.com/Ja5S8sEEyx— Meera Mitun (@meera_mitun) October 27, 2019
0 Comments