பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை மீரா மிதுன். இவரது நடவடிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்த ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையே இவருக்கு கிடைத்த அவப்பெயரை கருத்தில் கொண்டு, மீரா மிதுன்நடித்த படங்களில் இருந்த அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டதுடன், அவர் ஒப்பந்தமாகி இருந்த படங்களில் இருந்தும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேற்றப்பட்டார்.
இதனால் கடுப்பாகி, சம்பந்தப்பட்ட படக்குழுவினருடன் மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு புறம் சென்று கொண்டிருக்க அவர் பேசும் ஆடியோக்கள், சர்ச்சையான புகைப்படங்கள் என சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது பெயரை மேலும் டேமேஜ் செய்து வருகிறது.
முன்னதாக அவர் மது அருந்தி விட்டு பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்க, தற்பொழுது ஸ்டைலாக புகைப்பிடிக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் உலாவ துவங்கி இருக்கிறது.
Social Plugin