திருச்சியை சேர்ந்த லலிதா நகைக்கடை திருட்டு விவகாரத்தில் குளறுபடிகள் இருப்பதாக சமூக வலைதளவாசிகள் விமர்சனம் செய்ய துவங்கி இருக்கின்றனர்.
கடந்த அக்டோபர் 1ம் தேதி இரவு, திருச்சியை சேர்ந்த பிரபல லலிதா நகைக்கடையிலிருந்து 13 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டின நகைகள் முகமூடி அணிந்த இரு கொள்ளையர்களால் திருடப்பட்டது.
இது குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகள் மூலம், புதுக்கோட்டையில் தங்கி இருந்த 6 வடமாநில வாலிபர்களை திருச்சி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, நடைபெற்ற இந்த சம்பவம் திருட்டு அல்ல எனவும், நகைக்கடை நிர்வாகத்தால் நடத்தப்பட்ட நாடகம் எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நெட்டிசன்கள், 'அத்தனை காவலாளிகள் இருந்தும் கொள்ளையர்களை எளிதாக கொள்ளை அடித்து சென்றது எப்படி?, ட்ரில்லிங் மெசினை வைத்தோ, கம்பியை வைத்தோ சுவரை உடைத்திருந்தால் ஒரு காவலாளிக்கு கூட சத்தம் கேட்டிருக்காதா என்ன?
அப்படியே உடைத்து சென்றாலும், நகைகளை பெரும்பாலான நகைக்கடைகளை போல லாக்கருக்குள் வைத்து செல்லாதது ஏன்? அப்படியே இருந்தாலும் நகை திருடு போகாமல் இருக்க ஒரு அலாரம் கூடவா கடைக்குள் இல்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், இந்த திருட்டு சம்பவம், இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்கான மோசடி நடவடிக்கை எனவும் குற்றம் சாட்டு கின்றனர் சமூக வலைதளவாசிகள்.
Social Plugin