மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா அவர்களது வாழ்க்கை வரலாறு தலைவி என்கிற பெயரில் உருவாக உள்ளது. A.L. விஜய் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை 'கங்கனா ரனாவத்' ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறார்.
இது குறித்து முன்னதாக எந்த வித எதிர்ப்பும் கிளம்பி இராத நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் சமீபத்திய பேச்சு அதிமுக வினர் இடையே சலசலப்பபை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்த நடிகை, 'நான் 16வயதில் முதன் முதலில் உறவு வைத்து கொண்டேன். பெற்றோர்கள் பிள்ளைகள் இந்த வயதில் உறவு வைத்து கொள்வதை குற்றம் போல பார்க்க கூடாது. அதனை ஊக்குவிக்க வேண்டும்' என சர்ச்சையை கிளப்பும் படி பேசி இருந்தார்.
இதனால் குறிப்பிட்ட நடிகைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், 'இப்படியொரு கேவலமான நடிகை தன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தால், அம்மாவின் ஆன்மா நம்மை மன்னிக்காது' என அதிமுக வினர் எதிர்ப்பு கொடி காட்ட துவங்கி இருக்கின்றனர்.
Social Plugin