அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது ப்ரொன்க்ஸ் உயிரியல் பூங்கா. கடந்த சனிக்கிழமை இப்பூங்காவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட தினத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்தனர், அப்பொழுது எவரும் எதிர்பாராத விதத்தில் 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர், பாதுகாப்பு வேலியை தாண்டி, ஆபத்தான முறையில் சிங்கத்தின் அருகே சென்றார்.
சென்றதுமட்டுமில்லாமல், அதனை வெறுப்பேற்றும் விதத்தில் நடனமும் ஆட, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். என்றாலும் சிங்கம் எந்தவித ஆக்ரோசத்தையும் காட்டிடாத நிலையில் அப்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து, வீடியோவில் இருப்பவர் மையா ஆட்ரி என்கிற பெண் என்பதை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
Social Plugin