வாகன மாசுபாடு, தொழிற்சாலை மாசுபாடு என தினம் தினம் பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அளித்து வரும் பலபேர், ஒரு நாள் கொண்டாடும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது குறித்து கவலை பட துவங்கி விடுகிறோம்.
இப்படி தீபாவளி சமயங்களில் பட்டாசு வெடிக்காமல் கொண்டாட அறிவுரை கூறிக்கொண்டு பலர் வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இந்நிலையில் பிரபல விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டும்,
'பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு படுகிறது. அதனால் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாடுங்கள்' என விளம்பரம் செய்து இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த, பிரபல பட்டாசு உற்பத்தி நிறுவனமான காக் பிராண்ட்,
நீங்கள் முதலில் காற்றை மாசுபடுத்தாத விமானங்களை உபயோகிக்கிறீர்களா? வொயிட் பெற்றோல் போட்டு ஓசோனில் நேரடியாக ஓட்டை போடுபவர்கள்தானே நீங்கள். உங்கள் விளம்பரத்திற்காக மற்றவர்கள் தொழிலை கெடுக்காதீர்கள்' என ஆவேசமாக பதிலடி கொடுத்து இருந்தது.
பட்டாசு நிறுவனத்தின் இந்த பதிலடியை, சமூக வலைதள வாசிகள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Social Plugin