இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என திரைத்துறையில் யார் வேண்டுமானாலும் நாயகன் ஆகலாம் என்கிற நிலையை தமிழ் சினிமா எட்டி இருக்கிறது.
இந்நிலையில் தொழில் செய்து கோடிகளை குவித்த தொழிலதிபர்கள் சிலரும் திரைத்துறையில் நாயகனாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானா தொழிலதிபர் ஒருவரும் நாயகனாக இருக்கிறார்.
மேலும் தனக்கு ஜோடியாக வரும் நாயகியும் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என அடம்பிடிக்கும் அவர், தமிழ் சினிமாவின் உச்ச நடிகை ஒருவரை தன் படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் விடாது துரத்தி வருகிறாராம்.
நாயகி என்ன சொல்லி தட்டி கழித்தாலும், 'நீங்கள் தான் என் திரைப்பட நாயகி' என விட மறுக்கும் அவர், நடிகை வழக்கமான சம்பளமான 5 கோடியை இரட்டிப்பாக்கி 10 கோடி கேட்டும் கொடுக்க சம்மதித்து மிரளவைத்து இருக்கிறாராம்.
Social Plugin