Ad Code

Responsive Advertisement

விபரீதம் அறியாமல் தூங்கிய நாய்..! லாவகமாக இரையாக்கிய சிறுத்தை... அதிர்ச்சி காணொளி


தூங்கி கொண்டிருக்கும் நாய் ஒன்றினை சிறுத்தை லாவகமாக வேட்டையாடும் காணொளி ஒன்று இணையத்தை சுற்றி வருகிறது.

ஆக்கிரமிப்புகள் காரணமாக வனவிலங்குகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது. இந்த தாக்குதல்களினால் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வீட்டு வாசலில் இரவு நேரத்தில் தூங்கிகொண்டிருந்த நாய் ஒன்றை, சிறு சத்தமும் எழுப்பாமல் அருகே சென்று, எந்த விதத்திலும் நாய் தப்பிவிடாதவாறு சரியான தருணத்திற்காக காத்திருந்து சிறுத்தை வேட்டையாடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த பலரும், 'ஆபத்தை அறிய மோப்ப சக்தி, அதிக கேட்கும் திறன் கொண்ட நாயையே எளிதாக வேட்டையாடி செல்லும் சிறுத்தையிடம் இருந்து மனிதர்கள் நாம் தப்பிப்பது அத்தனை சுலபம் அல்ல' என கருத்து தெரிவித்து வருகின்றனர்.