Ad Code

Responsive Advertisement

குடிபோதையில் ஓட்டுநர்...! தள்ளாடி கவிழ்ந்த பேருந்து...! பதைபதைக்க வைக்கும் வீடியோ


பேருந்து ஓட்டுநர் ஒருவர், குடிபோதையில் பேருந்தை இயக்கி சாலையில் கவிழ்க்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

வேகம் மற்றும் சவுகரியம் காரணமாக அரசு பேருந்துகளை விட மக்கள் தனியார் பேரூந்துகளையே தங்கள் பயணத்திற்கு பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர்.

இப்படி இன்றியமையாத ஒன்றாக விளங்கி வரும் தனியார் பேருந்து சேவைகள், தரமானதாக இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் பயணியரின் உயிருக்கு உலைவைக்கும் ஒன்றாகவும் விளங்கி வருகின்றன.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் உலாவரும் வீடியோ ஒன்றில், கேபிஎன் நிறுவனத்தின் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து இயங்குவதும் பின்னர் ஆபத்தான வேகத்தில் திரும்பி ரோட்டில் கவிழ்ந்து விடும் அதிர்ச்சிகர காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

ஓட்டுநர் குடித்து விட்டு போதையில் பேருந்து இயக்கியதே விபத்துக்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், பேருந்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது தெரியாமலே இருந்து வருகிறது.