'தலைவா' தொடங்கி 'சர்கார்' வரை அவரது அனைத்து திரைப்பட ரிலீஸின் போதும் பிரச்சனை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து. படக்குழுவினர் படாத பாடுபட்டே தியேட்டர்களை அத்திரைப்படங்கள் எட்டிப்பார்த்தன.
இப்படி இருக்க அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக உதவி இயக்குனர் கேபி செல்வா, 'பிகில் திரைப்பட கதை தன்னுடையது' எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், 'கேபி செல்வாவுக்கு முன்னதாகவே இந்த கதையை எழுதி விட்டதாக' விளக்கம் அளித்திருந்தது அட்லீ தரப்பு. இதனை அடுத்து இந்த வழக்கானது அடுத்தவராத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே 'பிகில்' திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த கதை திருட்டு வழக்கினால் சொன்னபடி அத்திரைப்படம் வெளியாவதில் மாபெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
Social Plugin