Ad Code

Responsive Advertisement

காத்து வாங்கும் 'பிகில்' தியேட்டர்கள்...! 'கைதி'க்கு மட்டும் நிரம்பி வழியும் கூட்டம்


தீபாவளி ரேஸில் கலந்து கொண்ட நடிகர் விஜயின் பிகில் மற்றும் கைதி திரைப்படங்களை பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து பிரமாண்ட பொருட்செலவில் உருவான திரைப்படம் பிகில். விஜயின் திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் போட்டி போட்டு பிகிலை வாங்கி திரையிட்டன.

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 900 திரையரங்குகளில் பிகில் திரையிடப்பட, மிஞ்சிய 300 திரையரங்குகள் மட்டுமே கார்த்தியின் கைதி திரைப்படத்திற்கு கிடைத்தது..

இந்நிலையில் படங்கள் வெளியாகி 5 நாட்களை கடந்து விட்ட நிலையில், இந்த நிலைமை அப்படியே மாறி வருகிறது. அதாவது பிகிலை விட கைதிக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்பொழுது அந்த திரைப்படத்தை பார்க்க பலரும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக இன்றும் கைதி திரைப்படத்திற்கான காட்சிகள் நிரம்பி ஹவுஸ் ஃபுல்லாக நிரம்பி வழிகிறது. அதே சமயம் பிகில் திரைப்பட திரையரங்குகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் சென்னையின் பிரபல தேவி, மாயாஜால், ரோகினி ஆகிய திரையரங்குகள், பெரும்பாலான காட்சிகளை கைதி திரைப்படத்திற்கு மாற்றி வருகின்றன.

Post a comment

0 Comments