Ad Code

Responsive Advertisement

'பிகில்' இனி தேறாது...! 'கைதி'க்கு தியேட்டரை கொடுங்க...! தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி


விஜய் நடிப்பில் வெளியான பிகில், கார்த்தி நடிப்பில் வெளியான கைதி ஆகிய திரைப்படங்கள் கடந்த 25ம் தேதி வெளியான நிலையில், விஜயின் பிகிலுக்கே முக்கால்வாசி தியேட்டர்கள் முன்னுரிமை வழங்கின.

தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1200 திரையரங்குகள் உள்ள நிலையில், வெறும் 300 திரையரங்குகள் மட்டுமே கைதி திரைப்படத்திற்கு வழங்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் கைதி திரைப்படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்ப்பை கண்ட திரையரங்க உரிமையாளர்கள், அத்திரைப்படத்திற்கான காட்சிகளை அதிகரித்து வருகின்றனர்.

பிகில் திரைப்படத்திற்கு கிடைத்த சுமார் விமர்சனமும், இந்த முடிவிற்கு காரணமாக அமைந்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதன் மூலம் 300 ஆக இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை, தற்பொழுது 500 என மாபெரும் எண்ணிக்கையை எட்டி இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது . 


Post a Comment

0 Comments