அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. என்றாலும் வெற்றிக்கூட்டணியான விஜய்-அட்லீ காம்போ இம்முறை ஜொலிக்கவில்லை என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதே சமயம், கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, படம் நன்றாக இருந்தாலே ஒப்புக்கொள்ளாத பிற நடிகர்களின் ரசிகர்கள், சுமாரான விமர்சனம் பெற்றுவரும் பிகில் திரைப்படத்தை சகட்டு மேனிக்கு களைக்க துவங்கியிருக்கின்றனர்.
இதனால், பிகில் ஒரு படுதோல்வி படம் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பதிந்து விட கூடாது என்கிற காரணத்திற்காக, விஜய் ரசிகர்களே, படம் சுமார் தான். அதற்காக பிளாப் என்று பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.
'தயவு செய்து உண்மையான கருத்துக்களை தெரிவியுங்கள்' என விஜய் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த பதிவு சமூக வலைத்தளங்களில் படுவைரல் ஆகி வருகிறது.
0 Comments