#Bigil #TamilRockers
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாகவும், நடுநிலை விமர்சகர்களுக்கு ஒரு சுமாரான படமாகவும் பிகில் அமைந்திருந்தது.இந்நிலையில், தமிழ் சினிமாவுக்கே மாபெரும் தலைவலியாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், பிகில் திரைப்படத்தையும் HD தரத்தில் முதல் நாளிலேயே வெளியிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இருந்து, பிகில் திரைப்படத்தை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆர்வக்கோளாறான நெட்டிசன்கள் சிலர், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் தரவிறக்கம் செய்த பிகில் திரைப்பட காணொளியை,
பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பி வருகின்றனர். இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த படக்குழு, சட்டவிரோதமாக ஒளிபரப்பும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
0 Comments