Ad Code

Responsive Advertisement

ஆமா காப்பிதான் அதுக்கென்ன இப்போ...? கொதித்தெழுந்த அட்லீ


இயக்குனர் அட்லீ மீது ராஜாராணி துவங்கி, பிகில் வரை கதை திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கொதித்தெழுந்து இருக்கிறார் அட்லீ.

சக்தே இந்தியா, இறுதி சுற்று, கனா என பிகில் திரைப்படம் பல திரைப்படங்களின்  கலவை என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த மீம்ஸ் களும் அதிரடியாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், விமர்சனங்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.

'நான் காப்பி அடித்ததாக கூறப்படும் அந்த படங்களை நானும் பார்த்திருக்கிறேன் ரசித்திருக்கிறேன். அதன் தாக்கங்கள் தென்பட்டு இருக்கலாம்.

ஆனால் அதனை மையமாக வைத்து நான் என் கதைகளை எழுதவில்லை. என் கதை நானே எழுதிய சொந்த கதை. இது குறித்து யார் விமர்சித்தாலும் எனக்கு கவலை இல்லை' என ஆதங்கம் போங்க பேசி இருக்கிறார்.

Post a comment

0 Comments