நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா-சாயீஷா ஜோடி, இந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.
தமிழ் சினிமாவின் பிளே பாய் நடிகராக வலம்வந்த ஆர்யா, கஜினிகாந்த் திரைப்பட படப்பிடிப்பில் நடிகை சாயீஷாவிடம் நட்பாக பழக துவங்கி, காப்பான் படப்பிடிப்பின் போது இருவரிடையே காதல் மலர்ந்தது.
இதனை தொடர்ந்து ஒரே மதத்தை சேர்ந்தவர்களான இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். இந்நிலையில் காப்பான் படப்பிடிப்பில் ஆர்யா சாயீஷாவிடம் காதலை சொன்ன தருணம் புகைப்படமாக வெளிவந்துள்ளது.
காமெடி நடிகர் சதீஸ் குறிப்பிட்ட புகைப்படத்தை, தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தத்தக்கது.
Social Plugin