தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா இன்று, அறிமுக நாயகர்களுடன் ஜோடி போடும் லெவலுக்கு இறங்கி மார்க்கெட் போய் நிற்கிறார்.
இதற்கு முக்கிய காரணமாக சரவணா ஸ்டோர் அண்ணாச்சி, சரவணன் அருள் அவர்களுடன் அவர் நடித்த விளம்பரம்
அமைந்ததாக, சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.
இதிலிருந்து சற்று மீண்டு, சிம்புவுடன் மஹா, பார்ட்னர் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனால் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவரை திடுக்கிட செய்திருக்கிறது அண்ணாச்சி குறித்து வெளியான தகவல்.
ஜே.டி, ஜெரி ஆகியோர் இயக்கத்தில் அண்ணாச்சி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாக ஒரு செய்தி பிரபல செய்தி தாளில் வெளியானது.
உண்மைக்கு புறம்பான இந்த செய்தியை கண்டு பதறி அடித்துக்கொண்டு, 'இது பொய்யான செய்தி' என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஹன்சிகா.
NOT TRUE ! ❎ pic.twitter.com/uY0jq5OH8q— Hansika (@ihansika) October 2, 2019
Social Plugin