Ad Code

Responsive Advertisement

என்னை சீரழித்த அரசியல் வாரிசு இவர்தான்..! வெளிப்படையாக தெரிவிக்க இருக்கும் நடிகை


நடிகை ஆண்ட்ரியா திருமணமான அரசியல் வாரிசு ஒருவர் தன்னிடம் நெருக்கமாக பழகி ஏமாற்றி விட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

இதனால் அவர் கர்ப்பமடைந்த கருக்கலைப்பு வரை சென்றதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதை சில காலங்கள் நிறுத்தி, ஆயூர்வேத முறையில் சிகிச்சை பெற்று மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

என்றாலும் ஆண்ட்ரியாவை ஏமாற்றியவர் யார் என்ற கேள்வியை, ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கும், நல விரும்பிகளும் நடந்ததை தெரிந்து கொள்ள, 'Broken wings' என்கிற புத்தகத்தை அவர் வருகிற 17ம் தேதி வெளியிட இருக்கிறாராம்.

அந்த புத்தகத்தில் தனது வாழ்க்கை குறித்த அத்தனை தகவல்களுடன், தன்னிடம் நெருக்கமாக பழகி ஏமாற்றிய அந்த அரசியல் வாரிசு யார் என்ற பதிலும் இடம்பெற்று இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.