Ad Code

Responsive Advertisement

ஒரு நோயாளியை கூட்டி வந்தால் '75000' ரூபாய்..!! அம்பலமாகும் '108 ஆம்புலன்ஸ்' தில்லுமுல்லுகள் ..


விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் கமிஷனுக்காக, அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை தவிர்த்து, தனியார் மருத்துவமனைக்கு உயிருக்கு போராடும் சிறுமியை கொண்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.

நாம் கற்பனை என கடந்து சென்ற இந்த காட்சி, இன்றும் நம் தமிழகத்தில் நடந்து வருகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், 108 ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுனர்கள் சிலர், போராடும் உயிரை பொருட்படுத்தாது, கமிஷன் கொடுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல முற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது எழுந்துள்ளது.

இது குறித்து 108 சேவையை தமிழக அளவில் நிர்வகித்து வரும், செல்வகுமார் அவர்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விசாரணை  நடைபெற்று வருகிறது.

அதில் ஓட்டுனர்களுக்கு கமிஷன் எந்த முறையில் கொடுக்கப்படுதுகிறது உள்ளிட்ட பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது நோயாளி ஒருவரை கொண்டு வந்து தங்கள் மருத்துவமனையில் சேர்த்தால், அவர்கள் செலுத்தும் பில்லில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படுகிறதாம்.

மேலும் சில மருத்துவமனைகள் நோயாளியை கொண்டு வந்து விட்டதுமே உடனடி பேமண்டுகளையும் ஓட்டுநர்களுக்கு வழங்குகின்றனவாம். இது மட்டுமல்லாது,

உடல் உறுப்பு தானம் செய்பவர்ளை அழைத்து வந்தால் ஓட்டுநர், மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இருவருக்கும் தலா 75000 ரூபாய் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டும் அதிர்ச்சிகர தகவல்களும் இதன் மூலம் வெளியாகியுள்ளது.