தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக நடிகர் அஜித், ரசிகர் மன்றங்களை கலைத்தது, திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்குபெறாமல் ஒதுங்கியே இருப்பது போன்ற நடவடிக்கைகள் அவருக்கு ரசிகர்கள் மேல் அக்கறை இல்லை என்கிற விமர்சனங்களை கிளப்பி இருந்தது.
இந்நிலையில் அந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது வீடியோ ஒன்று.
குறிப்பிட்ட வீடியோவில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அஜித்தை கண்டு ரசிகர் ஒருவர் வாயடைத்து போய் நிற்கிறார். அவர் அருகில் வரும் சமயத்தில் கை கொடுக்கலாமா வேண்டாமா என தயங்கி நிற்கிறார்.
குறிப்பிட்ட ரசிகரின் தயக்கத்தை கண்ட அஜித், தானாக முன்வந்து ரசிகருடன் கை குலுக்கி செல்கிறார். அவ்வளவுதான் அந்த ரசிகரின் கண்களில் மகிழ்ச்சி அலைகடலென பெருக்கெடுத்து ஓடுகிறது.
இப்படி ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு, அவர்கள் மீது அக்கறை கொண்ட அஜித், ரசிகர்களை விட்டு விலகி இருப்பதும் அவர்கள் மீதான அக்கறையிலேயே என்பதை நிரூபிக்கும் விதத்தில் அமைந்துள்ளது அந்த காணொளி.
A Trending Video On Social Media Right Now..😎— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 1, 2019
Must Watch it And Comment One Word About Our THALA..❤️#GreatHumanBeingTHALA pic.twitter.com/DitTIs4Biy
Social Plugin