Ad Code

Responsive Advertisement

என்னிடம் எல்லை மீறிய வீடியோவை வெளியிடுவேன்..! நடிகர்களை மிரட்டும் சர்ச்சை நடிகை


சுஜி லீக்ஸ், ஸ்ரீ லீக்ஸ் வரிசையில் விரைவில் பல திரைத்துறை பிரபலங்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏற இருக்கிறது என கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஒருவர், அழகி போட்டிகளில் கலந்து கொண்டு அதில் கிடைத்த பிரபலத்தால் ஓரிரு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில்கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற குடும்ப திரைப்படம் ஒன்றிலும் இவர் நடித்திருந்தார்.

என்றாலும் சமீபத்தில் இவருக்கு மக்களிடையே கிடைத்த அவப்பெயரை கருத்தில் கொண்டு, நடிகை வரும் காட்சிகளை படக்குழு கத்தரித்து. இதனால் கடுப்பான நடிகை, பழிவாங்கும் நோக்கில் தன்னிடம் போனில் கொஞ்சி குலாவிய குறிப்பிட்ட திரைப்பட பிரபலங்களை, அவர்கள் ஆடியோவை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி வருகிறாராம்.

இதனால் அத்திரைப்பட பிரபலங்கள் செய்வதறியாது விழித்து வருவதாகவும் கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.