Ad Code

Responsive Advertisement

ரீல் தம்பிக்கு வாழ்க்கை கொடுத்த விஜய்...! ரியல் தம்பியை மறந்து விட்டாரே...! சமூக வலைத்தளங்களில் கிளம்பும் சர்ச்சை


நடிகர் விஜயின் தீவிர ரசிகரான நடிகர் சாந்தனுவிற்கு, அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் வாய்ப்பளித்து இருக்கிறார் தளபதி விஜய்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தது.

அதன் படி, சமூக வலைத்தளங்களில் அண்ணா அண்ணா என அழைத்து ரசிகர்களால் விஜயின் தம்பியாகவே கருத்தப்பட்டும் சாந்தனுவும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் தகவல் உறுதியானது.

இதன் மூலம் தனக்கான ஒரு திருப்புமுனைக்கு காத்திருந்த சாந்தனு, தனது ரோல் மாடலான விஜய் மூலம் நிறைவேறி இருப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அதே சமயம், விஜயின் தம்பி முறையில் வரும் நடிகர் விக்ராந்த் நல்ல படங்கள் நடித்தும் திரைத்துறையில் பெரிய அளவில் ஜொலிக்காமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால் நடிகர் விக்ராந்துக்கும் சாந்தனுவிற்கு செய்ததை போல விஜய் உதவி செய்யலாமே என ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.  

ஆனால் இது குறித்த பஞ்சாயத்து ஆரம்ப முதலே இருவருக்குமிடையே சென்று கொண்டிருக்கிறது. ஆரம்ப கால கட்டத்தில் விஜய் தனக்கு உதவாத விரக்தியில், விக்ராந்த் அஜித்தை முன்னிலை படுத்தி பேசி இருந்ததும் விஜய் இவரை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.