Ad Code

Responsive Advertisement

தளபதி 64: முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் விஜய்... ரசிகர்களை குஷி படுத்தும் தகவல்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜயின் 64 வது திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

அட்லீயின் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில், அவரது அடுத்த படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தற்பொழுது துவங்கி இருக்கிறது.

படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் அண்மையில் இறுதியான நிலையில், இத்திரைப்படத்தில் விஜயின் லுக் குறித்து முடிவு செய்யும் போட்டோ ஷூட்டும் அண்மையில் நடைபெற்று இருக்கிறது.

அதன் படி, இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஜய் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் ஸ்டைலான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய், முதன் முறையாக, கசங்கிய சட்டை, கலைந்த முடி என ரசிர்கள் கற்பனை கூட செய்திராத தோற்றத்தில் இத்திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.