Ad Code

Responsive Advertisement

'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதெல்லாம் அநியாயம்...! இந்திய பெண்கள் பாவம்... குமுறும் சர்ச்சை நடிகை


இந்திய திரைத்துறையில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வம்பில் சிக்குபவர் கங்கனா ரனாவத். என்னதான் நடிப்பில் திறமையான ஒருவராக இருந்தாலும், பிரபலத்துக்ககா இவர் செய்யும் பப்ளிசிட்டி காரியங்கள் பலரையும் முகம் சுளிக்கவே செய்து விடுகிறது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இவர் பேசிய சர்ச்சையான விஷயங்கள் இந்தியா முழுவதும் கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது. குறிப்பிட்ட நேர்காணலில், 'குழந்தைகள் உறவு வைத்தால் ஊக்குவிக்க வேண்டும்.

அதை குற்றம் போல பார்க்க கூடாது. நானெல்லாம் 16 வயதிலேயே உறவு வைத்து கொண்டேன்' என பெருமையாக பேசி இருந்தார். மேலும் 'இந்தியாவின் கலாச்சாரமான ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையே தவறு.

இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இம்முறையால்தான் உறவுகளுக்குள் விரிசல் வருகிறது' என முகம் சுளிக்கும் படி பேசி சர்ச்சைகளை காட்டுத்தீபோல கொளுத்தி போட்டு இருக்கிறார்.