அப்படி சமீபத்தில் பல கோடி பட்ஜெட்டில் உருவான பிரமாண்ட திரைப்படத்தில் நடித்த இவர், உச்ச நடிகர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் கெஞ்சியும் அத்திரைப்படத்தின் விளம்பரங்களில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் நடிகையின் மீது கோபத்தில் இருந்த உச்ச நடிகர், தயாரிப்பாளர் மூலம் அத்திரைப்படத்தில் நடித்த மற்றொரு நடிகையின் நடிப்பை மட்டும் பாராட்டி விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுத்தார்.
தனது செயலுக்கு பதிலடி கொடுப்பது போல இருந்த நடிகரின் இந்த செயல், நடிகையை கலங்க வைத்துள்ளது. மேலும் பிற முன்னணி நடிகர்களும் நடிகையின் நடவடிக்கை பிடிக்காமல் தங்கள் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய கூடாது என கட்டளை இட்ட தகவலும் நாயகியின் காதுக்கு செல்ல, செய்வதறியாது நிற்கிறாராம் அந்த நடிகை.
Social Plugin