Ad Code

Responsive Advertisement

ஒரு 'இட்லி' 75 ரூபாய்..! 'தோசை' 140..! ஹோட்டல் பில்லை கண்டு மிரளும் நெட்டிசன்கள்


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படும் தஞ்சையில், அநியாய விலைக்கு விற்கப்படும் உணவு பொருட்கள் குறித்த பதிவு சமூக வலைத்தளங்களை ஆட்டி படைத்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் வீ.ஓ.சி நகரில் அமைந்துள்ளது 4 நட்சத்திர உணவகம், லக்ஸ்மி ஹோட்டல். இந்த ஹோட்டலில் சமீபத்தில் உணவருந்திய ஒருவர், உணவு பொருட்களின் விலையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

அந்த புகைப்படத்தில் ஒரு இட்லி 75 ரூபாய், ஒரு தோசை 140 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அதனை கண்டு மிரண்ட சமூக வலைதளவாசிகள், குறிப்பிட்ட உணவகத்தை விமர்சித்து வருகின்றனர்.

அதே சமயம், 'உணவு விலை கட்டுப்பாடு துறை, இது போன்று அநியாய விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க, ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என்ற வேண்டுகோள்களும் குவிந்து வருகிறது.